மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை 1000 ஆக அதிகரிக்க வேண்டும் என முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் தொடர்பான கருத்தரங்கு ஒன்றில் பேசிய பிரணாப், நாட்டில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை கடைசியாக 1977-ம் ஆண்டு அதிகரிக்கப்பட்டதாகவும், அப்போது மக்கள் தொகை 55 கோடி மட்டுமே என்றும் குறிப்பிட்டார். அதற்கேற்றவாறு அப்போது 543 தொகுதிகள் ஏற்படுத்தப்பட்டதாகும் கூறினார்.
தற்போது மக்கள் தொகை இரட்டிப்பாகிவிட்ட நிலையில், அதற்கேற்ப மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையையும் இரட்டிப்பாக்க வேண்டும் என பிரணாப் ஆலோசனை கூறினார். மக்களவை தொகுதிகள் எண்ணிக்கை உயர்விற்கேற்ப மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கையையும் அதிகரித்துக்கொள்ளலாம் என்றும் பிரணாப் தெரிவித்தார்.