இந்தியா

பயத்தில் கெஜ்ரிவாலை அழைக்கவில்லை: மணீஷ் சிசோடியா ட்வீட்

பயத்தில் கெஜ்ரிவாலை அழைக்கவில்லை: மணீஷ் சிசோடியா ட்வீட்

webteam

கெஜ்ரிவால் மெட்ரோ ரயில் டிக்கெட்டின் விலையை குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுவார் என்ற பயத்தில்தான் அவர் அழைக்கப்பட வில்லை என்று மணீஷ் சிசோடியா கூறினார்.

நொய்டா நகரில் உள்ள தாவரவியல் பூங்காவை டெல்லியில் உள்ள கல்காஜி மந்திர் பகுதியுடன் இணைக்கும் 12.5 கி.மீட்டர் தூரம் கொண்ட புதிய வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை இந்நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

இதுகுறித்து டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தனது ட்விட்டர் பதிவில், "டெல்லி மெட்ரோ ரயில் தொடக்க விழாவிற்கு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அழைக்கபடாதது டெல்லி மக்களை அவமானப்படுத்தும் விதமாக உள்ளது. இந்த விழாவிற்கு வந்தால் கெஜ்ரிவால் மெட்ரோ ரயில் டிக்கெட்டின் விலையை குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுவார் என்ற பயத்தில்தான் அவர் அழைக்கப்பட வில்லை" என குறிப்பிட்டிருந்தார்.

இச்சம்பவம் குறித்து கிறிஸ்துமஸ் விழா ஒன்றில் கலந்து கொண்ட கெஜ்ரிவாலிடம் பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு அதை பற்றி பேசுவதற்கு இது சரியான தருணம் இல்லை என்று கூறினார்.