உத்திரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் பிரதமர் மோடியை காணவில்லை என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் கடந்த மார்ச் 6ஆம் தேதிக்கு பின்னர் பிரதமர் மோடியை காணவில்லை என அவரது புகைப்படத்துடன் கூடிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இந்த சுவரொட்டியால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இச்செயலில் ஈடுபட்ட நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், போஸ்டரை அகற்றும் பணியில் மாநில பாஜக அரசு ஈடுபட்டுள்ளனர்.