இந்தியா

மத்திய ஆயுதப்படை காவலர் தேர்வில் மேற்குவங்க தேர்தல் வன்முறை குறித்த கேள்வியால் சர்ச்சை

JustinDurai
மத்திய ஆயுதப்படை காவலர்களுக்காக மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில், மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த தேர்தல் வன்முறை குறித்து கேள்வி கேட்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 8ஆம் தேதி நடத்தப்பட்ட தேர்வில், மேற்கு வங்க தேர்தல் வன்முறை குறித்தும், டெல்லி விவசாயிகள் போராட்டம் அரசியல் உள்நோக்கம் கொண்டதா என்பது குறித்தும் கேள்விகள் இடம்பெற்றுள்ளன. முதன்முறையாக இந்த தேர்வுகளில் அரசியல் ரீதியான கேள்விகள் இடம்பெற்றிருப்பதாக தேர்வாளர்கள் கூறுகின்றனர்.
மேற்கு வங்க தேர்தல் வன்முறை தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டிருப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ள திரிணாமுல் காங்கிரஸ், அரசியல் சித்தாந்தம் கொண்டவர்களை ஆயுதப்படையில் சேர்க்க முயற்சி நடைபெறுவதாக குற்றம்சாட்டியுள்ளது.