இந்தியா

மும்பை: புத்தாண்டு கொண்டாட்ட முன்பதிவு - ஆன்லைன் மூலம் நூதன மோசடி 

EllusamyKarthik

மும்பையை சேர்ந்த இருவர் போலியான பெயரில் பிரத்யேக பங்களா, வில்லா மற்றும் பிரபல நட்சத்திர விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான முன்பதிவை செய்வதாக ஆன்லைன் மூலம் விளம்பரம் செய்துள்ளனர். 

புது வருடமான 2022-யை கோலாகலமாக வரவேற்கும் விதமாக உலக மக்கள் அனைவரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் மும்பையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான விடுதி, ரிசார்ட் தொடர்பான விளம்பரத்தை பார்த்து சிலர் பணம் செலுத்தி ஏமாற்றப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மும்பையை சேர்ந்த இருவர் போலியான பெயரில் பிரத்யேக பங்களா, வில்லா மற்றும் பிரபல நட்சத்திர விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான முன்பதிவை செய்வதாக ஆன்லைன் மூலம் விளம்பரம் செய்துள்ளனர். அதுவும் மும்பையின் மிக முக்கிய இடங்களில் இந்த முன்பதிவு என சொல்லியுள்ளனர்.  

அதற்காகவே பிரத்யேக வலைதளம் ஒன்றை உருவாக்கி போலியான பெயரில் வலைதளமும் தொடங்கி, அதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.  அதனை பார்த்த பெண் ஒருவர் ரிசார்ட் ஒன்றில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக தனக்கு ரூம் வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் 72000 செலவாகும் என சொல்லியுள்ளனர். அதை அனுப்பினால் அந்த பெண்ணின் பெயரில் ரூமி புக் செய்வோம் என சொல்லியுள்ளனர். 

உடனடியாக மொத்த தொகையையும் அந்த பெண் டிஜிட்டல் பண பரிவர்த்தனை அனுப்பி உள்ளார். ரூம் பதிவு செய்ததற்கான Confirmation மின்னஞ்சல் ஒன்றும் அவர்கள் தரப்பில் உள்ளனர். இருப்பினும் ரிசார்ட் தரப்பில் தொடர்பு கொள்வதற்கான எண் ஏதும் அவருக்கு கொடுக்கப்படாமல் இருந்துள்ளனர். அதையடுத்து அந்த பெண்ணுக்கு சந்தேகம் வர தனக்கு ரூமி புக் செய்துள்ளதாக சொல்லப்பட்ட ரிசார்ட் தரப்பில் அணுகிய போது தான் ஏமாற்றப்பட்டதை தெரிந்துக் கொண்டுள்ளார். பின்னர் போலீசில் புகார் கொடுத்துள்ளார் அவர். 

போலீசார் இந்த மோசடியை செய்த இருவரை அடையாளம் கண்டு, கைது செய்துள்ளனர். 29 வயதான அவினாஷ் மற்றும் 21 வயதான ஆகாஷ் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மும்பையை சேர்ந்த இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இவர்கள் மீது சுமார் 12 புகார்கள் தற்போது வரை வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.