மத்தியப்பிரதேசத்தின் எல்லை மாவட்டங்ளில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 120 ரூபாயை தாண்டியும், டீசல் விலை லிட்டருக்கு 110 ரூபாயை தாண்டியும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அனுபூர், பால்காட் உள்ளிட்ட மாவட்டங்களில் பெட்ரோல், டீசல் விலைகள் அதிகரித்துள்ளன. இந்தப் பகுதிகளுக்கு தொலைதூரத்திலிருந்து பெட்ரோல், டீசல் வரவேண்டி இருப்பதால் போக்குவரத்து செலவு சேர்த்து விலை அதிகமாக இருப்பதாக பெட்ரோல் முகவர்கள் கூறியுள்ளனர். மத்திய பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 116.62 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டருக்கு 106.01 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.