இந்தியா

புதுச்சேரி: மீண்டும் தலையெடுக்கும் பேனர் கலாசாரம்

புதுச்சேரி: மீண்டும் தலையெடுக்கும் பேனர் கலாசாரம்

JustinDurai
புதுச்சேரியில் பேனர் தடை சட்டத்தையும் மீறி முதலமைச்சர் ரங்கசாமியின் பிறந்த நாளையொட்டி என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் அதிகளவில் பேனர் வைத்துள்ளனர்.
முதலமைச்சர் ரங்கசாமி வரும் 4-ஆம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். இதனையொட்டி முதலமைச்சர் ரங்கசாமியை 'சார்பட்டா' படத்தின் நாயகன், பேட்மிண்டன் வீரர் உள்ளிட்டவர்களுடன் உருவகப்படுத்தி நகர் முழுவதும் பேனர் வைத்துள்ளனர்.
புதுச்சேரியில் பேனர் மற்றும் கட்டவுட்டுகள் வைக்கக்கூடாது என்ற சட்டம் அமலில் உள்ளது. துணைநிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி அச்சட்டத்தை தீவிரமாக அமல்படுத்தி வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகளவு பேனர் வைக்கப்பட்டுள்ளது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.