நெடுஞ்சாலை திட்டம் மூலம் 14 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் மத்திய அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத் பதிவிட்டுள்ளார்.
இந்திய கடலோரப் பகுதிகளை இணைக்கும் திட்டம் பாரத் மாலா. இது இந்தியாவின் கடலோர பகுதிகள் மற்றும் துறைமுகங்களை நெடுஞ்சாலைகளுடன் இணைக்கும் திட்டமாகும். அடுத்த 5 ஆண்டுகளில் 83,677 கி.மீ. நெடுஞ்சாலைகள் 6.92 லட்சம் கோடி செலவில் அமைக்கப்படும் என்றும் இதனால் இந்தியாவிலுள்ள 14 கோடிப் பேர் வேலை பெறுவார்கள் என்றும் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.