இந்தியா

நான்காம் கட்ட ஊரடங்கு: பல தளர்வுகளை அறிவித்துள்ள மாநில அரசுகள்!!

webteam

மூன்றாம்கட்ட ஊரடங்கு நிறைவடைந்துள்ள நிலையில் பல மாநிலங்களும் புதிய தளர்வுகளுடன் நான்காம் கட்ட ஊரடங்கை அறிவித்துள்ளன.

தெலங்கானாவைப் பொறுத்தவரை, மாஸ்க் அணியாவிடில் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும், தெலங்கானாவில் ஆன்லைன் வர்த்தகம் முழுமையாக செயல்பட அனுமதி. கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் சலூன் கடைகள் இயங்கலாம். ஹைதராபாத்தில் மட்டும் ஆட்டோ, டாக்ஸி சேவைகளுக்கு அனுமதி. என அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் குறைந்த பயணிகளுடன் பேருந்து, ஆட்டோ, டாக்ஸி சேவை உள்ளிட்டவை மீண்டும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆட்டோவில் ஒரு பயணியும், டாக்ஸ்யில் இரு பயணியும், பேருந்தில் அதிகபட்சமாக 20 பயணிகள் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் வணிக வளாகங்களின் 50% கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மீதியுள்ள கடைகள் மற்றொரு நாளில் திறக்கப்படும். இது சுழற்சி முறையில் நடைபெற வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. சலூன், பார்லர்கள் ஏசி இல்லாமல் இயங்க அனுதிக்கப்பட்டுள்ளது. சலூன்களுக்கு வருபவர்கள் வீட்டில் இருந்தே துண்டு கொண்டுவர வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் 50% பயணிகளுடன் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து சேவை செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது