இந்தியா

ஜம்மு காஷ்மீரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

JustinDurai
ஜம்மு காஷ்மீரில், பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
குல்காம் மாவட்டத்தில் உள்ள போம்பை, கோபால்போரா ஆகிய கிராமங்களில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல்கள் கிடைத்தன. இதனையடுத்து சம்பந்தப்பட்ட இடங்களை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்து, பயங்கரவாதிகளை சரணடையுமாறு எச்சரித்தனர். ஆனால், அவர்கள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கியால் சுட்டதால் இருதரப்பினருக்கும் இடையே சண்டை மூண்டது. இதில் 5 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.