இந்தியா

பெண்களுக்கு எதிரான சட்டமா ? பாஜக தேர்தல் அறிக்கையில் சர்ச்சைக்குரிய வாசகம்

பெண்களுக்கு எதிரான சட்டமா ? பாஜக தேர்தல் அறிக்கையில் சர்ச்சைக்குரிய வாசகம்

Rasus

பெண்களுக்கு எதிரான குற்றங்களை புரிய சட்டம் கொண்டுவரப்படும் என பாஜக தேர்தல் அறிக்கையில் தவறாக அச்சிடப்பட்டிருப்பது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

மக்களவை தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் நேற்று வெளியிட்டனர். அதில் விவசாயிகளுக்கு வட்டியில்லாத கிரெடிட் கார்டுகள் வழங்கப்படும் என்பன உள்ளிட்ட 75 சிறப்பம்சங்கள் இடம்பெற்றிருந்தன. அத்துடன் பெண்களுக்கு எதிரான குற்றங்களை புரிய சட்டம் கொண்டுவரப்படும் என குறிப்பிடப்பட்டிருந்து பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க சட்டம் கொண்டுவரப்படும் என்பதற்கான சொற்சொடரே கவனமில்லாமல் தவறாக அச்சிடப்பட்டது தெரியவந்துள்ளது.

இதனிடையே இதனை வைத்து காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது. குறைந்தபட்சம் ஒரு வாக்குறுதியாவது அவர்களின் உள்நோக்கத்தை பிரதிபலிப்பதாக உள்ளதே என பாஜகவை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது.