இந்தியா

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்: நாக்பூர் தென்மேற்கு தொகுதியில் ஃபட்னாவீஸ் போட்டி

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்: நாக்பூர் தென்மேற்கு தொகுதியில் ஃபட்னாவீஸ் போட்டி

rajakannan

மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் முதல்கட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் நாக்பூரின் தென்மேற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். 

288 தொகுதிகள் இருக்கும் மகாராஷ்டிராவில் வரும் 21ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. பாஜக மற்றும் சிவசேனா கட்சிகள் கூட்டணி வைத்து இந்த தேர்தலை எதிர்கொள்கின்றன. இந்த நிலையில் பாஜக சார்பில் போட்டியிடும் 125 வேட்பாளர்களின் பட்டியல் முதல் கட்டமாக வெளியிடப்பட்டுள்ளது. அதில், முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் நாக்பூரின் தென்மேற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். 

ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கும் 12 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. 52 பேருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவும் சிவசானாவும் தனித்தனியாக போட்டியிட்டன. இதில் பாஜக 122 இடங்களையும் சிவசேனா 63 இடங்களையும் கைப்பற்றின.