பெங்களூரு முகநூல்
இந்தியா

மோசமான போக்குவரத்து நெரிசல் கொண்ட நகரம்.. முதல் இடம்..?

பெங்களூருவில் 10 கிலோ மீட்டர் தூரத்தைக் கடக்க 28 நிமிடங்கள் 10 விநாடிகள் ஆவதாக, தனியார் அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

PT WEB

ஆசியாவிலேயே மோசமான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நகரங்களின் பட்டியலில் பெங்களூரு நகரம் முதலிடம் பிடித்துள்ளது.

பெங்களூருவில் 10 கிலோ மீட்டர் தூரத்தைக் கடக்க 28 நிமிடங்கள் 10 விநாடிகள் ஆவதாக, தனியார் அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால், பெங்களூரு நகர மக்கள், ஆண்டுக்கு சராசரியாக 132 மணி நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்கட்டமைப்புகள், மக்கள் தொகை அதிகரிப்பு ஆகியவையே, இந்த போக்குவரத்து நெரிசலுக்கு பிரதான காரணிகளாக பார்க்கப்படுகிறது.

பெங்களூருக்கு அடுத்தபடியாக, இரண்டாவது இடத்தில் மஹாராஷ்டிராவின் புனே நகரம் உள்ளது. இங்கு 10 கிலோ மீட்டர் தூரத்தைக் கடக்க 27 நிமிடங்கள் 50 விநாடிகள் ஆவதாக தெரிக்கப்பட்டுள்ளது