இந்தியா

அசாமில் ஒரு கிலோ தேயிலைத் தூள் விலை ரூ.99,999 மட்டுமே

அசாமில் ஒரு கிலோ தேயிலைத் தூள் விலை ரூ.99,999 மட்டுமே

JustinDurai
அசாமில் ஒரு கிலோ தேயிலைத் தூள் ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகி சாதனைப் படைத்துள்ளது.
மனோகரி தேயிலைத் தோட்டத்தில் விளைவிக்கப்பட்டு கையால் தயாரிக்கப்பட்ட ஒரு கிலோ பராம்பரிய மனோகரி கோல்ட் தேயிலைத் தூள் திப்ரூகாரில் உள்ள தேயிலை விற்பனை மையத்துக்கு கொண்டுவரப்பட்டது. கடும் போட்டிக்கு இடையே அந்த தேயிலைத் தூள் 99 ஆயிரத்து 999 ரூபாய்க்கு ஏலம் போனது. கடந்த 2020 ஆம் ஆண்டு இதே தேயிலைத் தூள் ஒரு கிலோ 75 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகியிருந்தது.