இந்தியா

அத்வானி, மன்மோகன் சிங் கூட புலம்பெயர்ந்தவர்களே - அமைச்சர் அமித்ஷா 

அத்வானி, மன்மோகன் சிங் கூட புலம்பெயர்ந்தவர்களே - அமைச்சர் அமித்ஷா 

webteam

அத்வானி, மன்மோகன் சிங் ஆகியோர் கூட புலம்பெயர்ந்தவர்கள் தான் என அமைச்சர் அமித்ஷா மக்களவையில் குறிப்பிட்டார்

கடும் எதிர்ப்புக்கு மத்தியில் தேசிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு மக்களவையில் 293 பேர் ஆதரவு தெரிவித்தனர். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 82 எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மக்களவையில் மசோதாவை தாக்கல் செய்து பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, குடியுரிமை சட்டம் சிறுபான்மையினருக்கு பூஜ்யம் புள்ளி பூஜ்யம் பூஜ்யம் ஒரு சதவிகிதம் கூட எதிரானது அல்ல எனத் தெரிவித்துள்ளார். 

மேலும் பேசிய அவர், குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவால் அநீதி ஏற்படும் என கேள்வி எழுப்புவதே தவறு. 1947ம் ஆண்டில் இந்தியாவுக்கு புலம்பெயர்ந்தவர்களை எல்லாம் இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொண்டது. இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் கிழக்கு மற்றும் மேற்கு பாகிஸ்தானில் இருந்து புலம்பெயர்ந்தவர்கள் இருப்பார்கள். அத்வானி, மன்மோகன் சிங் ஆகியோர் கூட புலம்பெயர்ந்தவர்கள் தான் என தெரிவித்தார்