அமைதியே தங்கள் விருப்பம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் நாளை விடுவிக்கப்படுகிறார் என்று இம்ரான் கான் அறிவித்துள்ளார். பாகிஸ்தான் நாடாளுமன்ற கூட்டுக் குழு கூட்டத்தில் பேசிய அவர், அமைதி மற்றும் நல்லெண்ண அடிப்படையில் அபிநந்தனை விடுவிக்க உள்ளதாக தெரிவித்தார். அமைதியே தங்கள் விருப்பம் என்றும் காஷ்மீர் தொடர்பான பேச்சுவார்த்தையை மீண்டும் நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
விமானப்படை வீரர் அபிநந்தனை பத்திரமாக ஒப்படைக்க வேண்டும் என இந்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், அவரை விடுவிக்கப் போவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் பேசிய இம்ரான்கான், “தவறான புரிந்தல்களால் நாடுகள் அழிந்து போயிருக்கின்றன. அதனால், தவறாக புரிந்து கொள்ளப்படும் என்று பயந்தேன். போர் ஒரு தீர்வு அல்ல. இந்தியா எதாவது தாக்குதல் நடத்தினால், நாமும் பதிலடி கொடுக்கலாம். நிலைமை கையை மீறி போக விட்டுவிடக் கூடாது” என்றார்.
விமானப்படை வீரர் அபிநந்தன் நாளை விடுவிக்கப்படுகிறார் என்று பாகிஸ்தான் அறிவித்துள்ள நிலையில், முப்படை தளபதிகளின் செய்தியாளர் சந்தித்து 5 மணியில் இருந்து 7 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.