இந்தியா

நீட் வயது உச்சவரம்புக்கு தடை

நீட் வயது உச்சவரம்புக்கு தடை

webteam

நீட் தேர்வில் வயது உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டதற்கு டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வை சிபிஎஸ்இ நடத்துகிறது. நீட் தேர்வுக்கான தகுதிகளாக சிபிஎஸ்இ வெளியிட்ட அறிக்கையில்  25வயதுக்கு மேற்பட்டோர் தேர்வு எழுத முடியாது என்ற விதிமுறைக்கு அதில் இடம்பெற்றது. இதனை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று நடைப்பெற்றது. அதில் நீட் தேர்வுக்கான தகுதிகளாக சிபிஎஸ்இ வெளியிட்ட அறிவிக்கைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதித்து. மேலும் நீட் தேர்வை 25வயதுக்கு மேற்பட்ட பொதுப்பிரிவினர் எழுத முடியாது என்ற விதிமுறைக்கு தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.