TDS Limit on Fixed Deposit Interest Hiked web
இந்தியா

வங்கிகளில் "Fixed Deposit"-ல் முதலீடு செய்பவரா? உங்களுக்கான முக்கிய அறிவிப்பு!

வங்கிகளில் fixed deposit எனப்படும் நிலையான வைப்புத்தொகை திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு முக்கியமான அறிவிப்பை இந்த பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். என்ன அறிவிப்பு, யாருக்கு என்ன பயன் என்பதை விரிவாக பார்க்கலாம்.

திவ்யா தங்கராஜ்

வங்கிகளில்  fixed deposit-ல் முதலீடு செய்யும்மோது கிடைக்கும் வட்டி ஒவ்வொரு காலாண்டிலும் வாடிக்கையாளரின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும். அவ்வாறு கிடைக்கும் வட்டித் தொகை குறிப்பிட்ட அளவை தாண்டினால் அதற்கு tds பிடித்தம் செய்யப்படும். இது 60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு என இரு பிரிவாக உள்ளது.

60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு என்ன அறிவிப்பு?

அந்த வகையில் 60 வயதுக்கு உட்பட்டவர்கள்  fixed deposit-ல் முதலீடு செய்யும்போது அதற்கு கிடைக்கும் வட்டி வருவாய் 40,000 ரூபாய்க்கு மேல் இருந்தால் அதற்கு 10% tds பிடித்தம் செய்யப்படும். அதுவே வாடிக்கையாளரின் pan விவரங்கள் இல்லையெனில் இந்த tds பிடித்தம் 20% ஆக இருக்கும்.

தற்போது இந்த வரம்பு 40 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறை வரும் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும்.

எடுத்துக்காட்டாக  fixed deposit-ல் முதலீடு செய்து அதற்கான வட்டி ஆண்டுக்கு 85000 கிடைத்து இருக்கிறது என வைத்துக்கொள்வோம். 2025 பட்ஜெட் அறிவிப்புப்படி 60வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 50 ஆயிரம் மேல் வட்டிக்கு  10 சதவீதம் tds பிடித்தம் உண்டு. அதன்படி 85000 -ல் 10% என்றால் 8500 tds பிடித்தம் செய்யப்படும். 

fixed deposit

அதே போல ஆண்டு வருமானம் புதிய அறிவிப்பின்படி 12 லட்சத்து 75 ஆயிரத்திற்குள் இருந்தால் அதற்கு வரி கிடையாது என்ற அடிப்படையில் வருமான வரி தாக்கல் செய்யும்போது இந்த tds பிடித்த விவரங்களை குறிப்பிட்டு அதை claim செய்து கொள்ளலாம்.

60 வயதுக்கு அதிகமானவர்களுக்கு, 50 ஆயிரம் வரை வட்டி வருமானம் இருந்தால் tds பிடித்தம் செய்யப்படும். தற்போது 1லட்சம் என உயர்த்தப்பட்டுள்ளது. fixed deposit-ல் முதலீடு செய்யும்போது கிடைக்கும் வட்டி 60 வயதுக்கு அதிகமானவர்களுக்கு ஒரு லட்சத்திற்கு அதிகமாக இருந்தால் வட்டி வருவாயில் 10% tds  பிடிக்கப்படும்.