இந்தியா

கேரளாவுக்கு நாளை "ரெட் அலர்ட்"

கேரளாவுக்கு நாளை "ரெட் அலர்ட்"

jagadeesh

கேரளா, அருணாச்சலப் பிரதேசம், மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் நாளை ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

தென்மேற்கு பருவமழை தொடங்கி சில வாரங்கள் ஆன நிலையில் மழைப்பொழிவு தொடர்ச்சியாக இல்லாமல் இருந்தது. ஆனால் நாளை முதல் தென்மேற்கு பருவமழை கனமழைகொடுக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அந்தவகையில் கேரளா மற்றும் அருணாச்சலப் பிரதேசம் மேகாலயா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் லட்சத்தீவு, மத்திய மேற்கு அரபிக் கடல், கேரளா, கர்நாடகா ஒட்டிய கடலோரப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.