இந்தியா

கேரளாவை மீண்டும் அச்சுறுத்கிறது கனமழை - மத்திய அரசை நாடும் பினராய் விஜயன்

கேரளாவை மீண்டும் அச்சுறுத்கிறது கனமழை - மத்திய அரசை நாடும் பினராய் விஜயன்

rajakannan

தென்கிழக்கு அரபிக்கடலில் அக்டோபர் 6ஆம் தேதிக்கு பிறகு புயல் உருவாக வாய்ப்புள்ளதா‌க சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றவர்கள் அக்டோபர் 5ஆம் தேதியே கரைக்கு திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் குமரிக்கடல், அரபிக்கடல் பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம்‌ என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. தற்போது தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கைக்கு அருகே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக கூறியுள்ளது.

இந்நிலையில், புயல் அச்சம் காரணமாக கேரளாவில் திருச்சூர், பாலகாடு மற்றும் இடுக்கி மாவட்டங்களுக்கு அக்டோபர் 7ம் தேதி சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் பினராயி விஜயன் இந்தத் தகவல் தெரிவித்தார். மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய பேரிடர் மீட்புப் படையினரின் உதவியை கேரள அரசு கேட்டுக் கொண்டுள்ளது. 

சமீபத்தில்தான் கேரளாவை கனமழை மற்றும் வெள்ளம் புரட்டி போட்டது. அதில், சுமார் 231 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், மீண்டும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.