இந்தியா

3 வயது சிறுவன் இலையில் கட்டி ஊர்வலம்: குழந்தைகள் நல வாரியம் விசாரணை

3 வயது சிறுவன் இலையில் கட்டி ஊர்வலம்: குழந்தைகள் நல வாரியம் விசாரணை

webteam

கேரள மாநிலத்தில் நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலத்தின்போது, 3 வயது குழந்தையை பெரிய இலையில் கட்டி வைத்து ஊர்வலமாக அழைத்து சென்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கண்ணூரில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதற்காக நடைபெற்ற ஊர்வலத்தின்போது, 3 வயது குழந்தையை கிருஷ்ணரை போல் அலங்கரித்து, ஒரு பெரிய இலையில் கட்டி வாகனத்தில் சுமார் 2 மணி நேரம் ஊர்மலமாக கொண்டு சென்றுள்ளனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனைக் கண்ட, அம்மாநில குழந்தைகள் நல அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.