நாட்டின் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. சிறந்த பல்கலைக்கழகத்துக்கான பட்டியலில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ஏழாவது இடம் கிடைத்துள்ளது.
நாடு முழுவதும் இயங்கி வரும் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலை மத்திய அரசு வரிசைப்படுத்தி வெளியிட்டிருக்கிறது. அதில் ஒட்டுமொத்தமாக சிறந்த நூறு கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலில் சென்னை ஐஐடிக்கு முதலிடமும், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு 14 ஆவது இடமும் கிடைத்துள்ளது.
கோவை பாரதியார் பல்கலைக்கழகம் பட்டியலில் 21 ஆவது இடத்தை பிடித்துள்ளது.நூறு சிறந்த பல்கலைக்கழகத்திற்கான பட்டியலில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்திற்கு 28 ஆவது இடமும், எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்திற்கு 32 ஆவது இடமும் கிடைத்துள்ளது.200 சிறந்த பொறியியல் நிறுவனங்களுக்கான பட்டியலிலும் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்திருக்கிறது.
இதில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ஒன்பதாவது இடமும், அதைத் தொடர்ந்து திருச்சியில் இயங்கும் என்ஐடி-க்கு 10 ஆவது இடமும் கிடைத்துள்ளது. இந்தப் பட்டியலில் எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் 36 ஆவது இடத்தை பிடித்துள்ளது.