இந்தியா

ஐஐடிகளில் பெண்களுக்கு 20 சதவிகித கூடுதல் இடம்

ஐஐடிகளில் பெண்களுக்கு 20 சதவிகித கூடுதல் இடம்

webteam

இந்தியத் தொழில்நுட்ப உயர்கல்வி நிறுவனமான ஐஐடிகளில் பெண்கள் அதிக அளவில் சேர்ந்து படிக்கும் வகையில், அவர்களுக்கு 20 சதவிகித கூடுதல் இருக்கைகளை ஏற்படுத்த மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

2018ஆம் கல்வி ஆண்டு முதல் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் பெண்கள் சேர்க்கையை அதிகரிக்க ஊக்குவிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அண்மைக் காலமாக ஐஐடிக்களில் சேர்ந்து பயிலும் பெண்கள் எண்ணிக்கை குறைந்து வந்ததையடுத்து, அவர்களுக்கான ஒதுக்கீட்டை அதிகரிக்கவும், அவற்றை நிரப்பவும் ஊக்கமளிக்க மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.