உங்கள் நோக்கம் தெளிவாக இருந்தால் லக்கிம்பூர் கெரி விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவுடன் மேடையை பகிர வேண்டாம் என்று பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் நடைபெறும் மாநில டிஜிபிக்கள் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்துள்ளார். அவருக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கடிதம் எழுதியுள்ளார், அதில் லக்கிம்பூர் கெரி வன்முறை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ஆஷிஷ் மிஸ்ராவின் தந்தையான மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவுடன் மேடையை பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளார்.
அந்த கடிதத்தில் “உங்கள் நோக்கம் தெளிவாக இருந்தால் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவுடன் மேடைகளைப் பகிர வேண்டாம், அவரை பதவி நீக்கம் செய்யுங்கள். லக்கிம்பூர் கெரியின் திகுனியா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அக்டோபர் 3 ஆம் தேதி அன்று போராடிய விவசாயிகள் உட்பட எட்டு உயிர்களைக் கொன்ற வன்முறையில் குற்றம் சாட்டப்பட்ட 13 பேரில் ஆஷிஷ் மிஸ்ராவும் ஒருவர். அவர் அக்டோபர் 9ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். குற்றம் சாட்டப்பட்ட 13 பேரும் நீதிமன்ற காவலில் உள்ளனர், திங்களன்று மாவட்ட நீதிமன்றம் ஆஷிஷ் மிஸ்ராவின் ஜாமீன் மனுவை நிராகரித்தது. கடந்த வாரம் வெளியான தடயவியல் அறிக்கையிலும் ஆஷிஷ் மிஸ்ரா, அவரது நண்பர் அங்கித் தாஸ் மற்றும் அவரது தனிப்பட்ட கன்னர் லத்தீஃப் என்ற காலே ஆகியோரின் உரிமம் பெற்ற ஆயுதங்களிலிருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்பதை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்திருக்கிறார்
இதனைப்படிக்க...வேளாண் சட்டங்கள் ரத்து அறிவிப்பில் ராகேஷ் திகாயத்தின் பங்கு மிகப்பெரியது - யார் அவர்?