இந்தியா

‘நீட்’ மட்டும் போதாது.. ‘நெக்ஸ்ட்’ கட்டாயம்?

‘நீட்’ மட்டும் போதாது.. ‘நெக்ஸ்ட்’ கட்டாயம்?

webteam

எம்.பி.பி.எஸ் முடித்தாலும் நெக்ஸ்ட் என்ற புதிய தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் மருத்துவராக பணியாற்ற முடியும் என்ற கட்டுப்பாட்டை அடுத்த ஆண்டு முதல் மத்திய அரசு அமலுக்கு கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தற்போது எம்பிபிஎஸ் படிக்க நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அந்த இளநிலை மருத்துவ படிப்பு ஐந்தரை ஆண்டுகள் கொண்டது. இதை படித்து முடித்ததும் ஒரு வருடம் மாணவர்கள் பயிற்சி மருத்துவராக பணியாற்றுவர். இதையடுத்து மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்து மருத்துவராக தொடருவர். 

இதுவே வெளிநாட்டில் இருந்து மருத்துவம் படித்துவிட்டு இந்தியா வருபவர்களுக்கு எக்ஸிட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதில் தேர்ச்சி பெற்றால் தான் மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்ய முடியும் என்ற நிலை உள்ளது. 

இந்நிலையில் எம்.பி.பி.எஸ் முடித்தாலும் நெக்ஸ்ட் என்ற புதிய தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் மருத்துவராக பணியாற்ற முடியும் என்ற கட்டுப்பாட்டை அடுத்த ஆண்டு முதல் மத்திய அரசு அமலுக்கு கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான மசோதாவை வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. 

கடந்த 2017 ஆம் ஆண்டே இந்த தேர்வை மத்திய அரசு கொண்டுவர திட்டமிட்டது. ஆனால் கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து இந்த தேர்வை மத்திய அரசால் கொண்டுவர முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.