இந்தியா

”நாங்கள் மட்டும் ஆட்சிக்கு வந்தால் ஜன., 31க்குள் இந்த அறிவிப்பு வெளியாகும்” - கெஜ்ரிவால்

”நாங்கள் மட்டும் ஆட்சிக்கு வந்தால் ஜன., 31க்குள் இந்த அறிவிப்பு வெளியாகும்” - கெஜ்ரிவால்

webteam

குஜராத்தில் ஆம் ஆத்மி வெற்றிபெற்றால் ஜனவரி 31 ஆம் தேதிக்குள் பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிடுவேன் என குஜராத்தில் கெஜ்ரிவால் உறுதியளித்தார்.

ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், குஜராத்தில் தனது கட்சி ஆட்சிக்கு வந்தால், ஜனவரி 31, 2023-க்குள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவதற்கான அறிவிப்பை வெளியிடப் போவதாக தேர்தல் பரப்புரையின் போது உறுதியளித்துள்ளார்.

மேலும் அவர் பேசுகையில்... இந்த வாக்குறுதி பொய்யானவை அல்ல, பஞ்சாபில் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. சமீபத்தில் ஆயிரக்கணக்கான குஜராத் அரசு ஊழியர்கள், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் வீதிகளில் போராட்டம் நடத்தி வந்தனர் என அரவிந்த கெஜ்ரிவால் தெரிவித்தார்.

குஜராத்தில் டிசம்பர் 1 மற்றும் 5 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாரதிய ஜனத , ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் குஜராத்தில் முகமிட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அங்கு டிசம்பர் எட்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது