இந்தியா

“மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை ஏற்படுத்த சதி”- சிவசேனா

jagadeesh

மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை ஏற்படுத்த சதி செய்வோர் மாநில மக்களின் தீர்ப்பை அவமதிப்பதாக கருதப்படுவார்கள் என சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். 

மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், முதலமைச்சர் பதவியை சமகாலம் பகிர்ந்து கொள்வது தேர்தலுக்கு முன்பே சிவசேனாவும் பாஜகவும் ஒப்புக்கொண்ட விஷயம் என்றார். பழைய ஒப்பந்தமே இருக்கும் நிலையில் புதிய யோசனைகளை ஏன் முன் வைக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பிய ராவத், பாஜக தரப்பில் இருந்து எந்த தகவலும் வரவில்லை என்றும் தெரிவித்தார்.

மகாராஷ்டிராவில் தேர்தல் முடிவு வெளியாகி இரண்டு வாரங்களாகும் நிலையிலும், வருகிற 9-ஆம் தேதியுடன் சட்டப்பேரவையின் பதவிக் காலம் முடிவடைய உள்ள நிலையிலும் புதிய ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது.