இந்தியா

“நான் சங்கியா..! அப்ப உண்மையை சொல்ற எல்லாரும் சங்கிதான்” - கேரள முன்னாள் டிஜிபி

webteam

உண்மையை சொல்வதால் தான் சங்கி என்றால், உண்மையை கூறும் அனைவருமே சங்கிகள் தான் என கேரளாவின் முன்னாள் டிஜிபி தெரிவித்துள்ளார்.

கேரளாவின் முன்னாள் டிஜிபி சென்குமார் அண்மையில் பாஜக கட்சியில் சேரும் புதிய உறுப்பினர்களுக்கான நிகழ்ச்சியில் பங்கேற்று அதனை தொடங்கிவைத்தார். இதையடுத்து அவர் மீது பலர் அரசியல் விமர்சனங்களை தெரிவித்தனர். சென்குமார் வலதுசாரியின் ஆதரவாளர் என்றும், அவர் ஒரு சங்கி என்றும் பலர் விமர்சித்தனர். 

இந்நிலையில் தன்மீதான விமர்சனங்கள் குறித்து பதிலளித்துள்ள சென்குமார், “உண்மையை பேசுவதால் என்னை யாரேனும் சங்கிகள் என அழைத்தால், உண்மையை பேசும் அனைவருமே சங்கிகள் தான். நான் பல அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளேன். இதற்கு முன்னர் ஜமாத் இஸ்லாமி, டி.ஒய்.எஃப்.ஐ மற்றும் காங்கிரஸ் ஆகியோரின் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளேன். ஆனால் அப்போதெல்லாம் வராத விமர்சனங்கள், இப்போது பாஜக நிகழ்ச்சியில் பங்கேற்றவுடன் வந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், “அண்மையில் நான், எனக்கு தொடர்பில்லாத விமர்சனங்களை எதிர்கொள்கிறேன். எனவே அதற்கு முடிவு கட்ட வேண்டும் என தீர்மானித்துள்ளேன். எனவே தான் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று அதற்கு முற்றுப்புள்ளி வைத்தேன். நான் பாஜகவிலோ அல்லது ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திலோ சேரும் எந்த முடிவையும் எடுக்கவில்லை. இ-மெயில்களை கண்காணிப்பது என முன்னோடி துறையான உளவு துறையினர் தான். யார் யார் ரகசிய தகவல்களை கசிய விடுவார்கள் என்பதை நான் அறிவேன். தற்போது என் மீது எழுந்துள்ள விமர்சனங்களை நான் இதற்கு முன்னர் கண்டதில்லை” என தெரிவித்துள்ளார்.