இந்தியா

இந்தியாவில் 30% முஸ்லிம்கள் ஒன்றுபட்டால், 4 பாகிஸ்தான் உருவாகும்: திரிணாமுல் தலைவர் பேச்சு

Veeramani

இந்தியாவில் 30% முஸ்லிம்கள் ஒன்றுபட்டால், 4 பாகிஸ்தான்கள் உருவாகும் என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஷேக் ஆலம் தெரிவித்த கருத்து சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது.

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் பரப்புரையில், பல அரசியல் கட்சி தலைவர்களிடமிருந்தும் பல சர்ச்சைக்குரிய கருத்துகள் வெளிவந்தவண்ணம் உள்ளன. சமீபத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஷேக் ஆலம், பீர்பம் பகுதியில் உள்ள நானூரில் உள்ள பாசா பாராவில் டி.எம்.சி ஆதரவாளர்களிடம் உரையாற்றியபோது, “முஸ்லிம் மக்களில் 30 சதவீதம் பேர் ஒன்று கூடினால் 4 புதிய பாகிஸ்தான்களை உருவாக்க முடியும். நாம் 30 சதவீதம், அவர்கள் 70 சதவீதம். 70 சதவீத ஆதரவுடன் அவர்கள் ஆட்சிக்கு வருவார்கள், அவர்கள் வெட்கப்பட வேண்டும். நமது முஸ்லீம் மக்கள் ஒரு பக்கம் நகர்ந்தால், நாம் 4 புதிய பாகிஸ்தான்களை உருவாக்க முடியும். 70 சதவீத மக்கள் எங்கு செல்வார்கள்? என பேசினார்.

ஷேக் ஆலமின் பேச்சுக்கு பாரதி ஜனதா கட்சி கடுமையாக பதிலளித்துள்து. இது குறித்து பா.. தலைவர் அமித் மால்வியா பேசுகையில், "ஷேக் ஆலம் போன்ற டி.எம்.சி தலைவர்களுக்கு, கடந்த 10 ஆண்டுகளில் மம்தா பானர்ஜியின் வெட்கக்கேடான திருப்திபடுத்தும் அரசியல் காரணமாக 4 பாகிஸ்தானைக் கனவு காணும் தைரியம் உள்ளது. மம்தா பானர்ஜி மேற்கு வங்கத்தில் உள்ள பெரும்பான்மை சமூகத்தை இரண்டாம் தர குடிமக்களாக நடத்துகிறார்என ட்வீட் செய்துள்ளார்.