இந்தியா

மரண தண்டனை நிறுத்திவைப்பு... மத்திய அமைச்சர்கள் மகிழ்ச்சி

மரண தண்டனை நிறுத்திவைப்பு... மத்திய அமைச்சர்கள் மகிழ்ச்சி

Rasus

குல்பூஷண் விவகாரத்தில் சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவு இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

குல்புஷன் ஜாதவ் மரண தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது அவரது குடும்பத்தினருக்கும் இந்தியாவுக்கும் மிகப்பெரிய ஆறுதல் என வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இவ்வெற்றிக்காக பாடுபட்ட வெளியுறவுத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு பாராட்டுக்களை தெரிவிப்பதாக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகி தெரிவித்துள்ளார்.

முன்னதாக இந்தியர் குல்பூஷண் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறுத்தி வைக்க பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.