வாகா எல்லை வழியாக இன்று மதியம் அபிநந்தன் விடுவிக்கப்படுவார் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷி தெரிவித்துள்ளார்.
இந்திய விமானியான அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டார். பாகிஸ்தான் வசமுள்ள வீரர் அபிநந்தனை இந்தியாவிற்கு திரும்ப கொண்டுவர பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து இந்திய அரசும் பாகிஸ்தானிடம் வலியுறுத்தியது. நேற்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் இம்ரான் கான், நல்லெண்ண அடிப்படையில் எவ்வித நிபந்தனையுமின்றி அபிநந்தன் இன்று விடுவிக்கப்படுவார் என்று அறிவித்தார்.
அதன்படி வாகா எல்லை வழியாக இன்று மதியம் அபிநந்தன் விடுவிக்கப்படுவார் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் ராவல்பிண்டி ராணுவ முகாமில் இருந்து விமானம் மூலம் லாகூர் அழைத்துவரப்படும் அபிநந்தன் வாகா எல்லைக்கு சாலை மார்க்கமாக வரவுள்ளார். அங்கு இன்று மதியம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
வாகா எல்லைக்குள் அபிநந்தன் நுழையும்போது, அவருக்கு பிரம்மாண்ட வரவேற்புகள் அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவரை வரவேற்க பஞ்சாப் மக்கள் பெரும் திரளாக மலர்களோடும், வாழ்த்து பாதாகைகளோடும் காத்திருக்கின்றனர்.