இந்தியா

'நான் என்னை தேடி காடுகளுக்கு சென்றேன்" பிரதமர் நரேந்திர மோடி

'நான் என்னை தேடி காடுகளுக்கு சென்றேன்" பிரதமர் நரேந்திர மோடி

webteam

தன்னுடைய இளம் வயதில் வருடாவருடம் 5 நாட்கள் காட்டுக்குள் வசிப்பேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஹுயூமன்ஸ் ஆப் பாம்பே என்ற பேஸ்புக் பக்கத்தில் பிரதமர் மோடி நேர்காணலில் பேசினார். அப்போது அவருடைய இளம் வயது நினைவுகளை பகிர்ந்து கொண்டார். நான் என்னுடைய இளம் வயதில் தீபாவளி நாட்களில் 5 நாட்கள் காட்டுக்குள் வசிப்பேன். அங்கு தான் மனிதர்கள் நடமாட்டம் இல்லாமல் சுத்தமான தண்ணீர் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், எனது பயணம் குறித்து பலருக்கும் தெரியாது. நான் எனக்கு தேவையான உணவுப்பொருட்களை என்னுடன் எடுத்துச்செல்வேன். என் கையில் ரேடியோ, செய்தித்தாள் எதுவும் இருக்காது. அப்போது டிவி, இண்டெர்நெட் எல்லாம் கிடையாது. அன்று தனிமையில் நான் கற்றுக்கொண்ட வலிமைதான் இன்றும் எனக்கு பக்கபலமாக இருக்கிறது.  'நீங்கள் யாரை சந்திக்க போகிறீர்கள்'? என்று பலரும் என்னிடம் கேள்வி எழுப்புவார்கள். 'நான் என்னைத்தேடி தான் போகிறேன்' என்று பதில் கூறுவேன்.

நான் எல்லோரையும் வலியுறுத்துகிறேன். குறிப்பாக என்னுடைய இளம் நண்பர்களை வலியுறுத்துகிறேன். நீங்களும் இது போன்ற பயணங்களை செய்ய வேண்டும். உங்களுடைய பரபரப்பான வாழ்க்கையில் இருந்து கொஞ்சம் ஓய்வு எடுங்கள். இது உங்களை உங்களுக்கே அறிமுகம் செய்யும். உலகை வேறு கோணத்தில் பார்க்க இந்த மாதிரியான பயணங்கள் உங்களுக்கு உதவும். இந்த உலகத்தை உணர்ந்து வாழத்தொடங்குவீர்கள். 

இது உங்களுக்குள் ஒரு உத்வேகத்தைக் கொடுக்கும். உங்கள் தன்னம்பிக்கையை வளர்க்கும். நீங்கள் ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள்  என்பதை உணருங்கள்.புதிய வெளிச்சத்தை வெளிப்புறத்தில் தேடாதீர்கள். அந்த வெளிச்சம் உங்களிடத்திலேயே தான் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.