இந்தியா

நான் வங்கிகளில் கடன் வாங்கவில்லை: விஜய் மல்லையா

நான் வங்கிகளில் கடன் வாங்கவில்லை: விஜய் மல்லையா

webteam

கடன் ஏய்ப்பு ‌விவகாரத்தில் தப்பி லண்டனில் தஞ்சமடைந்துள்ள விஜய் மல்லையா தாம் ஒருபோதும் வங்கிகளில் கடன் வாங்கவில்லை என தெரிவித்துள்ளார்.

தமது டுவிட்டர் பதிவில், தாம் எந்த தவறும் செய்யவில்லை என்றும் ஊடகங்கள் தன்னை குற்றவாளி ஆக்கியுள்ளதாகவும் விஜய்மல்லையா குறிப்பிட்டுள்ளார். எந்த வங்கியிலும் ஒரு போதும் கடன் வாங்கியதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வங்கிகளில் வாங்கிய 9 ஆயிரம் கோடி கடனை திருப்பிச் செலுத்தவில்லை என கிங்பிஷர் குழும தலைவர் விஜய்மல்லையா மீது குற்றச்சாட்டு உள்ள நிலையில், அவர் இங்கிலாந்தில் தலைமறைவாக இருந்து வருகிறார். விஜய் மல்லையா மீது அமலாக்கப்பிரிவு மற்றும் சிபிஐ சார்பில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவரை இந்தியா கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.