இந்தியா

“வாய்ப்பு கிடைக்கவில்லை என வருத்தமில்லை” - மனம்திறந்த புவனேஷ் குமார்

“வாய்ப்பு கிடைக்கவில்லை என வருத்தமில்லை” - மனம்திறந்த புவனேஷ் குமார்

webteam

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் தான் விளையாடாமல் இருப்பது தொடர்பாக இந்திய பந்துவீச்சாளர் புவனேஷ்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

தான் அணியில் விளையாடாமல் இருப்பது தொடர்பாக பேசிய புவனேஷ், “வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதற்காக நான் வருந்தவில்லை. யாரும் வருந்தவும் மாட்டார்கள். ஓய்வு என்பதும் மிகவும் முக்கியமானது. ஷமி நியூஸிலாந்து தொடருக்கு எதிராக ஓய்வில் இருந்தார். நான் இந்த தொடரில் ஓய்வில் உள்ளேன். நீங்கள் தகுதியாக இருக்க வேண்டுமென்றால், நீங்கள் சீரான நிலையில் இருக்க வேண்டும். நீங்கள் அனைத்து போட்டிகளிலும் 100 சதவிகித திறமையை வெளிப்படுத்த வேண்டும். அந்த காரணத்திற்காக தான் நியூஸிலாந்து தொடரில் ஷமியும், ஆஸ்திரேலிய தொடரில் பும்ராவும் ஓய்வில் இருந்தனர். யார் வாய்ப்பு கிடைத்து விளையாடப்போகிறார்கள் என்பதற்காக நாங்கள் எப்போதும் வருந்தியதில்லை” என்று தெரிவித்தார்.

இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இதில், முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. நாளை மூன்றாவது போட்டியை இரு அணிகளும் விளையாடவுள்ளது. இந்தத் தொடரில் வேகப் பந்துவீச்சாளர் புவனேஷ் குமாருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.