இந்தியா

நிர்மலா சீதாராமனை மரியாதைகுறைவாக பேசிய காங். எம்.பி.க்கு பாஜக கண்டனம்

நிர்மலா சீதாராமனை மரியாதைகுறைவாக பேசிய காங். எம்.பி.க்கு பாஜக கண்டனம்

webteam

மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை பற்றி காங்கிரஸ் எம்.பி. அதிர் ரஞ்சன் சவுத்ரி, தரக்குறைவாக பேசியதாகக்கூறி பாரதிய ஜனதா உறுப்பினர்கள் அனைவரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனால் அவையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

மக்களவையில் வரிவிதிப்பு சட்டங்கள் திருத்த மசோதா மீதான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, பேச எழுந்த காங்கிரஸ் எம்.பி. அதிர் ரஞ்சன் சவுத்ரி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பலவீனமடைந்துவிட்டார் எனக் குறிப்பிடும் வகையிலான வார்த்தையைப் பயன்படுத்தினார். இதனால், அதிர்ச்சி அடைந்த பாரதிய ஜனதா உறுப்பினர்கள், நிரஞ்சன் சவுத்ரிக்கு ‌கண்டனம் தெரிவித்து முழக்கங்கள் எழுப்பினர். 

தொடர்ந்து அவை மரபை மீறி பேச வேண்டாம் என்றும், இவை அவை குறிப்பில் இருந்து நீக்கப்படும் என்றும் சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார். இதைத் தொ‌டர்ந்து பதில் அளித்து பேசிய நிர்மலா சீதாராமன், தனது உரையை முடிக்கும்போது, சவுத்ரியின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல், தாம் இப்பொழுதும் நிர்மலா தான் என்றும், தன்னிறைவு பெற்ற பெண் என்றும் கூறினார்