இந்தியா

கேதார்நாத்தில் வழிபட்டது என் அதிர்ஷ்டம் - பிரதமர் மோடி

கேதார்நாத்தில் வழிபட்டது என் அதிர்ஷ்டம் - பிரதமர் மோடி

webteam

கேதார்நாத்தில் வழிபட்டதை தான் அதிர்ஷ்டமாக நினைப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்

மக்களவைக்கான இறுதிக்கட்ட தேர்தல் இன்று நடந்து வருகிறது. தேர்தல் பிரசாரம் முடிந்த நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்துக்கு 2 நாள் பயணமாக பிரதமர் மோடி சென்றுள்ளார். அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் காலையில் கேதார்நாத் சென்ற பிரதமர், பாரம்பரிய உடை அணிந்து கோவிலில் வழிபட்டார்.

பின்னர் கேதார்நாத் குகைக்கோவிலில் தியானத்தில் ஈடுபட்டார். புனித குகைக்கோவிலில் அமர்ந்து பிரதமர் மோடி விடிய விடிய தியானம் செய்தார். இரவு முழுவதும் தியானம் செய்த நிலையில் இன்று காலையில் பத்ரினாத்துக்கு புறப்பட்டார்.

கேதார்நாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, கேதார்நாத்தில் வழிபட்டதை தான் அதிர்ஷ்டமாக நினைப்பதாக தெரிவித்தார். மேலும் பேசிய அவர், எனக்கும் கேதார்நாத்துக்கும் ஒரு உணர்வுப்பூர்வமான உறவு உள்ளது. கேதர்நாத்தின் வளர்ச்சிக்கு பல திட்டங்களை கொண்டு வந்தோம் .

இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு சென்று சுற்றிபார்ப்பதில் எந்த தவறும் இல்லை. ஆனால் இந்தியாவில் உள்ள வித விதமான இடங்களையும் இந்தியர்கள் சுற்றிப்பார்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்

பத்ரினாத் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று மாலையே மோடி மீண்டும்  டெல்லி திரும்புகிறார்.