இந்தியா

"நிச்சயமாக நீதி கிடைக்கும்" சுஷாந்த் காதலி ரியா கண்ணீர் மல்க வேண்டுகோள் !

"நிச்சயமாக நீதி கிடைக்கும்" சுஷாந்த் காதலி ரியா கண்ணீர் மல்க வேண்டுகோள் !

webteam

இனி சுஷாந்த் வழக்கு தொடர்பாக எதுவும் பேசப் போவதில்லை, நிச்சயம் நீதி வெல்லும் என்று காதலி ரியா சக்ரபோர்த்தி வீடியோ பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி அவரது மும்பை பாந்த்ரா வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். பட வாய்ப்புகள் அவருக்கு மறுக்கப்பட்டதாக ஒருபுறமும் அவரது காதலி ரியா சக்ரவர்த்தி பிரிவினாலும்தான் அவர் தற்கொலை செய்துகொண்டார் என்கின்ற பல்வேறு தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இதனையடுத்து ரியா மீது சுஷாந்தின் தந்தை போலீசில் புகார் அளித்தார். சுஷாந்த் சிங் ராஜ்புத்திடம் நிதி முறைகேட்டில் ஈடுபட்டு அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கி தற்கொலைக்கு தூண்டியதாக பாட்னாவில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் ரியா சக்கரபோர்த்தி உள்ளிட்ட 5 பேர் மீது தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் எப்.ஐ.ஆர். எனப்படும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.

இதனையடுத்து தன் மீதான வழக்கு விசாரணையை பாட்னாவில் இருந்து மும்பை போலீஸாருக்கு மாற்ற வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் ரியா மனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் ரியா வீடியோ பதிவொன்றை வெளியிட்டுள்ளார் அதில் "என்னுடைய வழக்கறிஞர்களின் ஆலோசனை பேரில் இனி சுஷாந்த் மற்றும் என் மீதான வழக்கு தொடர்பாக எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கப் போவதில்லை. நாட்டின் நீதி மீது எனக்கு எப்போதும் நம்பிக்கை இருக்கிறது நன்றி" என கண்ணீருடன் பேசியுள்ளார் ரியா.