கடந்த 2016 டிசம்பர் வாக்கில் பாகிஸ்தானை சேர்ந்த 16 வயதான அஸ்பக் அலி என்பவர் தவறுதலாக இந்திய எல்லைக்குள் நுழைந்து விட்டார். தொடர்ந்த நடைபெற்ற போர்நிறுத்த ஒப்பந்த மீறல் விவகாரத்தால் அவரை கைது செய்தது இந்திய இராணுவம். ஏறக்குறைய ஒன்றரை வருடங்கள் கழித்து , அவரை இன்று ராணுவம் விடுதலை செய்தது. இந்திய பாகிஸ்தான் எல்லையான வாகா எல்லையில் அவரை பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
பாகிஸ்தான் செல்லும் முன் பேசிய அஸ்பக் அலி ’தெரியாமல் தான் நான் இந்திய எல்லைக்குள் வந்தேன், ஏறக்குறை ஒன்றரை வருடம் கழித்து மீண்டும் பாகிஸ்தான் செல்கிறேன், ஆனால் இந்தியா நன்றாக இருக்கிறது, எனக்கு இங்கு வேலை கூட கிடைக்கும், நான் இங்கேயே இருந்துவிட விரும்புகிறேன், எனக்கு பாகிஸ்தான் சேல்ல துளியும் விருப்பம் இல்லை” என்றார். என்னுடைய இந்த கோரிக்கையை இந்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.