இந்தியா

சர்வதேச அளவில் முதலிடம் பிடித்த ஹைதராபாத் விமானநிலையம்

Rasus

ஹைதராபாத் சர்வதேச விமான நிலையம், பயணிகளுக்கு சிறந்த சேவையை வழங்குவதில் உலகளவில் முதல் இடத்தில் உள்ளது என சர்வதேச விமான நிலைய கவுன்சில் நடத்திய ஆய்வு கூறியுள்ளது.

ஆண்டுக்கு 5 மில்லியன் முதல் 15 மில்லியன் பயணிகள் வந்து செல்லக்கூடிய விமானங்களின் சேவைத் தரம் குறித்து சர்வதேச விமான நிலைய கவுன்சில் ஆய்வு நடத்தியது. இதில் ஹைதராபாத் விமான நிலையம் 5-க்கு 4.9 மதிபெண் பெற்று, முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

2009-ல் 4.4 மதிபெண் பெற்றிருந்த ஹைதராபாத் விமான நிலையம், சேவை தரத்தை மேம்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம், இந்த ஆய்வில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்த விமான நிலையம் ஆண்டுதோறும் 40 மில்லியனுக்கும் மேற்பட்ட பயணிகளைக் கையாளுவதாகவும் அதன் சேவை தரத்தைப் படிப்படியாக உயர்த்தியுள்ளதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.

மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம் மற்றும் சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் ஆகியவை டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்துடன் இரண்டாம் இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.