சிறுநீரக கல்
சிறுநீரக கல் ட்விட்டர்
இந்தியா

ஐதராபாத் - நோயாளியின் கிட்னியிலிருந்த 418 சிறுநீரக கற்கள்... அதிர்ந்துபோன மருத்துவர்கள்!

Jayashree A

ஐதராபாத்தை சேர்ந்தவர் 60 வயதான மல்லேஷ். சிறுநீரக கோளாறால் கடுமையாக பாதிக்கப்பட்ட இவர், பஞ்சாரா ஹில்ஸில் உள்ள ஆசியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் நெப்ராலஜி மற்றும் யூரோலஜி மருத்துவமனையில் சமீபத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அகற்றப்பட்ட சிறுநீரக கற்கள்

இவரை பரிசோதித்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். காரணம் இவரின் சிறுநீரகப்பையை சுற்றி 418 சிறுநீரக கற்கள் இருந்துள்ளன. இவற்றை அகற்றுவது மருத்துவர்களுக்கு சவாலான ஒன்றாக இருந்துள்ளது. காரணம், 27% மட்டுமே அவரது சிறுநீரகம் செயல்பட்டுள்ளது.

பொதுவாக சிறுநீரக கற்களை மருத்துவர்களை லேசரின் உதவியுடன் அகற்றுவார்கள். ஆனால் இவருடைய விஷயத்தில் வேறொரு சிகிச்சையை மருத்துவர்கள் மேற்கொண்டுள்ளனர். மருத்துவர்கள் டாக்டர் கே. பூர்ண சந்திர ரெட்டி, டாக்டர் கோபால் ஆர். தக் மற்றும் டாக்டர் தினேஷ் எம் ஆகியோரின் தலைமையிலான குழு குறைந்தபட்ச ஊடுருவும் நுட்பமான Percutaneous Nephrolithotomy (பிசிஎன்எல்) ட்ரீட்மெண்dடை தேர்ந்தெடுத்து இவரது கிட்னியில் இருந்த 418 சிறுநீரக கற்களை அகற்றி மிகப்பெரிய சாதனையை புரிந்துள்ளனர்.

மருத்துவ உலகின் மிகப்பெரிய சாதனையாக இது தற்போது சொல்லப்படுகிறது.

சிறுநீரக பாதுகாப்புக்கு, வெயில் காலங்களில் அதிகளவு தண்ணீர் மற்றும் உப்பு குறைந்த உணவு வகைகளை உண்ண வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.