போலீசார்
போலீசார்  PT
இந்தியா

ஹைதராபாத்: கட்டுக்கட்டாக பணம்.. ரூ.750 கோடியுடன் வலம் வந்த டிரக்; சோதனையிட்ட போலீசாருக்கு அதிர்ச்சி!

Jayashree A

தெலுங்கானா மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் வருவதை ஒட்டி அங்கு தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்துள்ளன. இதன் எதிரொலியாக அங்கு வாகனசோதனையில் போலீசார் இரவு பகலாக தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், கட்வாலி என்ற பகுதியில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்த தருணத்தில் டிரக் ஒன்று சந்தேகத்திற்கு இடமான வகையில் இரவு நேரத்தில் சுற்றிக்கொண்டிருந்தது.

பொதுவாக அந்த ரோட்டில் சட்டத்திற்கு புறம்பான வகையில் வியாபாரம் செய்பவர்களும் கடத்தல் காரர்களும் அந்த ரோட்டை பயன்படுத்துவதால், சந்தேகம் கொண்ட போலீசார் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றிய டிராக்கை மறித்து அவ்வாகனத்தை சோதனையிட்டுள்ளனர்.

அவ்வாறு சோதனையிட்ட போலிசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆம்... அந்த டிரக் முழுதும் சுமார் 750 கோடி பணம் இருந்திருக்கிறது. டிரக்கை ஓட்டி வந்த டிரைவரை விசாரித்ததில், அவர் கேரளாவிலிருந்து ஹைதராபாத்திற்கு செல்வதாக கூறினார். தொடர்ந்து அவரிடம் விசாரித்ததில் இப்பணம் union bank of india-க்கு சொந்தமானது என்றும் இந்த வங்கியானது கேரளாவிலிருந்து ஹைதராபாத்திற்கு மாற்றப்பட்டதால் அதன் ரொக்கப்பணத்தை டிரக்கில் அனுப்பி இருப்பதும் தெரிய வந்தது.

உடனடியாக தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் வந்து, ஆவணங்களை சரிபார்த்து, பிறகு பணத்தை எண்ணி சரிபார்த்து, பிறகு டிரக்கை அனுப்பி வைத்தனர்.

இருப்பினும் சற்று நேரம் அப்பகுதி இந்நிகழ்வால் மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது. இதுவரை சரியான ஆவனங்கள் ஏதும் இன்றி 165 கோடி மதிப்பிலான பணம் மற்றும் தங்கம், வெள்ளிப்பொருட்கள் கைப்பற்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் அதிக அளவில் பணம் ஏற்றிச்சென்ற டிரக்கை கைப்பற்றி சோதனை செய்தது, இது போலீசாரின் பொறுப்புணார்வையையும் கடமையையும் எடுத்துக்காட்டுகிறது.