இந்தியா

எரிமலையில் தேசிய கொடி: ஐதராபாத் இளைஞர் சாதனை

எரிமலையில் தேசிய கொடி: ஐதராபாத் இளைஞர் சாதனை

Rasus

ஐதராபாத்தை சேர்ந்த சாய் தேஜா என்ற இளைஞர் இந்தோனேஷியா சென்று எரிமலையில் தேசிய கொடியை பறக்க செய்து சாதனை படைத்துள்ளார். கனன்று கொண்டிருக்கும் டுகோனு எரிமலை பகுதிக்கு தைரியமாகச் சென்று அதனை வீடியோ பதிவும் செய்திருக்கிறார்.

இந்தோனேஷியா சென்ற அவர் உள்ளூர் மக்களின் உதவியோடு எரிமலைக்கு அருகே சென்று இந்தியாவின் தேசிய கொடியை பறக்க செய்தார். வாழ்வில் பல்வேறு பிரச்னைகளை சந்தித்த தனக்கு இந்த பயணம் மனநிறைவை அளித்ததாகக் கூறும் சாய் தேஜா, அடுத்து எந்த எரிமலைக்கு செல்லலாம் என ஆய்வு செய்து வருகிறார்.