இந்தியா

“கொரோனாவால் நூற்று கணக்கான குழந்தைகள் பெற்றோரை இழந்து தவிக்கின்றனர்” - கைலாஷ் சத்யார்த்தி

EllusamyKarthik

கொரோனா பெருந்தொற்றால் இந்தியாவில் நூற்று கணக்கான குழந்தைகள் பெற்றோரை இழந்து தவிப்பதாக அமைதிக்கான நோபல் பரிசை வென்றவரும், சிறுவர்கள் உரிமைகளுக்கான சமூக செயற்பாட்டாளருமான கைலாஷ் சத்யார்த்தி சில தினங்களுக்கு முன்னர் ட்விட்டரில் தெரிவித்திருந்தார். 

தங்களது பச்பன் பச்சாவ் அந்தோலன் இயக்கத்திற்கு மட்டும் கடந்த ஆண்டு முதல் பெற்றோரை இழந்து ஆதரவின்றி தவித்து வரும் குழந்தைகளுக்கு உதவி வேண்டி சுமார் 353கக்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்துள்ளதாகவும். அதில் 93 குழந்தைகள் பெற்றோரை இழந்து தவித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

மத்திய பிரதேச மாநிலத்தில் கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் மறுவாழ்வு இல்லம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.