இந்தியா

உணவு பரிமாறும் பெண் ரோபோ - அசாமை கலக்கும் உணவகம்

உணவு பரிமாறும் பெண் ரோபோ - அசாமை கலக்கும் உணவகம்

webteam

அசாமில் உள்ள உணவகம் ஒன்றில் பெண் ரோபோ ஒன்று உணவு பரிமாறுவது வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது.

அசாம் மாநிலத்தின் கவுகாத்தி நகரத்தில் தனியார் உணவு நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தை கரிஷ்மா பேகம் என்ற பெண் நிர்வகித்து வருகிறார். உணவகத்தில் பணிபுரியும் அனைவருமே பெண்கள் தான். இந்நிலையில் வாடிக்கையாளர்களை கவர பெண் ரோபோ ஒன்றை உணவக உரிமையாளர் பணி அமர்த்தியுள்ளார். இந்த ரோபோ உணவக உரிமையாளர் கரிஷ்மாவின் கணவர் ஃபரித் தயாரித்துள்ளார். இவர் ஏற்கனவே மூன்று ரோபோ ஆய்வுப்பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

அந்தp பெண் ரோபோவிற்கு அசாமின் பாரம்பரிய உடை அணிவிக்கப்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு வரவேற்பு பானம் வழங்குகிறது. இந்தப் பெண் ரோபோ வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. குறிப்பாக இளைஞர்கள் ரோபோவிற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். ரோபோ குறித்து உணவக உரிமையாளர் கரிஷ்மா கூறும் போது, இளைஞர்களை கவரும் வகையில் இந்த ரோபோவை பணியமர்த்தி உள்ளதகாவும், அதனால் வாடிக்கையாளர்கள் உற்சாகமடைவதாகவும் தெரிவித்துள்ளார்.