இந்தியா

வாழும் மனிதநேயம் : கொரோனாவால் பெற்றோர்களை இழந்த 100 குழந்தைகளை தத்தெடுத்த டேராடூன் நாயகன்

Veeramani

கொரோனா இரண்டாம் அலையில் பெற்றோர்களை இழந்த 100 குழந்தைகளை தத்தெடுக்கும் பணியை செய்துவருகிறார் டேராடூனை சேர்ந்த ஜாய் அறக்கட்டளை நிறுவனர் ஜெய் ஷர்மா.  

கொரோனா இரண்டாவது அலையின் கடுமையான பாதிப்பால் பல குழந்தைகள் தங்களின் பெற்றோரை இழந்துவிட்டார்கள், அந்த குழந்தைகள் தற்போது எந்த ஆதரவும் இன்றி தவிக்கின்றனர்.

இந்த சூழலில் உத்தராகண்ட் டேராடூனை சேர்ந்த ஜெய் ஷர்மாவின் செயல் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. கொரோனா இரண்டாம் அலையில் பெற்றோரை இழந்த 100 குழந்தைகளை தத்தெடுக்க ஜாய்(ஜஸ்ட் ஓபன் யுவர்செல்ஃப்) என்ஜிஓ நிறுவனர் ஜெய் ஷர்மா முடிவு செய்துள்ளார். அவர் பெற்றோரை இழந்த குழந்தைகளை தத்தெடுக்கும் ஒரு பிரச்சாரத்தையும் தொடங்கியுள்ளார். ஏற்கனவே இருபது குழந்தைகளை தத்தெடுத்துள்ளதாக அறிவித்திருக்கும் அவர், அந்த குழந்தைகளின் இருப்பிடம், கல்வி, சுகாதாரம் போன்ற தேவைகளுக்கு முழு உதவிசெய்வதாக அறிவித்திருக்கிறார்.

அடுத்த வாரத்தில் பெற்றோரை இழந்த ஐம்பது குழந்தைகளை தத்தெடுக்க இலக்கு வைத்துள்ள ஜெய்ஷர்மா, தனது குழு கிராமங்கள் மற்றும் உள்ளூர் பகுதிகளுக்கு சென்று இதுபோன்ற குழந்தைகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார். கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக இருந்த நேரத்தில், இந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் இலவச ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், கோவிட் மருத்துவ கருவிகள், சுத்திகரிப்பு கருவிகள் மற்றும் பிற மருத்துவ உபகரணங்களை விநியோகித்து உதவிசெய்தது.