நாடு முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வில் 20 ஆயிரத்து மேற்பட்டோர், கைகளால் கழிவுகளை அள்ளும் பணியில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சகம் நாடு முழுவதும், மனிதக் கழிவுகள் உள்ளிட்ட கழிவுகளை கைகளால் அள்ளும் மனிதர்கள் குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ளது. முதல் கட்டமாக 18 மாநிலங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் 20 ஆயிரத்து 500 பேர், கைகளால் கழிவுகளை அள்ளும் பணியில் ஈடுபடுவது தெரிய வந்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் மட்டும் 6 ஆயிரத்து 126 பேர் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மகாராஷ்ட்ராவில் 5 ஆயிரத்து 269 பேரும், கர்நாடகாவில் ஆயிரத்து 744 பேரும் கைகளால் கழிவுகளை அள்ளும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கழிவுகளை அள்ளும்பணியில் மனிதர்களை ஈடுபடுத்துவது சட்டப்படி குற்றம். இந்த சூழலில் இயந்திரங்களை கொண்டு கழிவுகளை அகற்றுவது உள்ளிட்ட பயிற்சிகளை அளிக்க, மத்திய சமூகநீதி மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.