இந்தியா

2018 முதல் டிஜிட்டல் விமான பயண திட்டம்

2018 முதல் டிஜிட்டல் விமான பயண திட்டம்

webteam

விமான டிக்கெட்டுடன் ஆதாரை இணைத்து எளிதான நடைமுறையுடன் விமான பயணம் மேற்கொள்ள புதிய திட்டம் அடுத்த ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது. 

இது தொடர்பாக, மத்திய அரசு டிஜிட்டல் பயணம் என்ற திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக இந்திய விமான நிலைய ஆணைய தலைவர் குருபிரசாத் மொஹாபத்ரா தெரிவித்துள்ளார். 

அவர் கூறும்போது, ’விமான பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்யும்போதே ஆதார் எண் இணைக்க வேண்டும். டிக்கெட்டில் உள்ள பார்கோடில் இந்த தகவல்கள் இடம்பெறும். பிறகு விமான நிலையத்தில் பயணிகளிடம் வழக்கமான பரிசோதனை நடைமுறைகள் இருக்காது. பயணிகளுக்கென பிரத்யேகமாக மின்னணு நுழைவு வாயில் இருக்கும். இதில் பார்கோடை ஸ்கேன் செய்து, பயோமெட்ரிக் முறையில் தங்கள் அடையாளத்தை பயணிகள் பதிவு செய்ய வேண்டும். பிறகு நுழைவாயில் கதவு தானாகவே திறக்கும். பரிசோதனை முயற்சியாக இந்த திட்டம் கொல்கத்தா, அகமதாபாத் மற்றும் விஜயவாடாவில் மூன்று மாதங்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது. பிறகு அனைத்துப் பகுதிக்கும் விரிவு படுத்தப்படும்’ என்றார்.