மூக்கடைப்பு நீங்க பயன்படுத்தப்படும் NASAL SPRAY எனும் நாசி மருந்துக்கு இந்தியாவில் பலர் அடிமையாகி விட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதிகம் பயன்படுத்தினால் அறுவை சிகிச்சை வரை கொண்டு நிறுத்திவிடும் என எச்சரிக்கும் மருத்துவர்கள் மூக்கடைப்பு மருந்துகளை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து சில வழிகாட்டுதல்களையும் வழங்கியுள்ளனர். ஆக்ஸிமெட்டோசோலின் மற்றும் ஃபெனிலெஃப்ரைன் உள்ள நாசி மருந்துகளை பயன்படுத்துவதில் கவனமாக இருக்க வேண்டும். இந்த வேதியியில் பொருட்கள் இருக்கும் மருந்துகள் நம்மை அதற்கு அடிமையாக்கிவிடக் கூடும்.
இரண்டு முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். அதிகபட்சமாக ஐந்து முறை பயன்படுத்திக் கொள்ளலாம். நீண்டகாலமாக மூக்கடைப்பு உள்ளவர்களுக்கு மோடோசோன் அல்லது ஃப்ளூட்டிகாசோன் போன்ற ஸ்ராய்டு உள்ள ஸ்ப்ரேக்கள் பாதுகாப்பானது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஆண்டிஹிஸ்டமைன் அசலாஸ்டின் என்ற வேதிப்பொருள் உள்ளடக்கிய மருந்தும் பாதுகாப்பானது. ரசாயனம் கலக்காத சலைன் ஸ்ப்ரே மருந்துகளும் நல்லது எனத் தெரியவருகிறது.