fuel price hike  web
இந்தியா

பெட்ரோல் ரூ.1 உயர்ந்தால்.. உங்கள் பட்ஜெட் எவ்வளவு எகிறும் தெரியுமா?

பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தால் காய்கறி, பால், பருப்பு விலையும் உயர்ந்து குடும்பச் செலவில் ரூ.300–500 வரை அதிகரிக்கும் .

PT WEB

பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் உயர்ந்தால், ஒரு நடுத்தரக் குடும்பத்தின் மாத பட்ஜெட்டில் 300 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை கூடுதல் சுமை ஏற்படும். வாகனங்களுக்கு நேரடியாக 30 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை மட்டுமே செலவு கூடினாலும், மறைமுகத் தாக்கமே பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எரிபொருள் விலை உயர்வால் சரக்குப் போக்குவரத்துச் செலவு உடனடியாக அதிகரித்து, வெளிமாநிலங்கள் மற்றும் கிராமங்களில் இருந்து லாரிகள் மூலம் வரும் காய்கறிகள், பால், பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்கிறது. இதனால் குடும்பங்களுக்கு மாதத்திற்கு 150 ரூபாய் வரை கூடுதலாகச் செலவாகலாம்.

மேலும் ஆட்டோ, கால் டாக்சி, பள்ளி வாகனக் கட்டணங்கள் மற்றும் ஆன்லைன் டெலிவரி கட்டணங்களும் உயர்வதால், ஒட்டுமொத்தமாக மாத பட்ஜெட்டில் குறைந்தது 500 ரூபாய் வரை பற்றாக்குறை ஏற்படும்.