இந்தியா

ஒரே நேரத்தில் தேர்தல் : செலவு எவ்வளவு?

webteam

ஒரே நேரத்தில் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலை நடத்துவதற்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாங்க 4 ஆயிரத்து 555 கோடி ரூபாய் தேவை என்று சட்ட ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக சட்ட ஆணையம் நடத்திய ஆய்வு அறிக்கையை கடந்த வாரம் மத்திய அரசிடம் தாக்கல் செய்தது. அதில் அடுத்த ஆண்டு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டால் 12 லட்சத்து 90 ஆயிரம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 9 லட்சத்து 40 ஆயிரம் கட்டுப்பாட்டு கருவிகள், 12 லட்சத்து 30 ஆயிரம் வாக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் பற்றாக்குறை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரம் ஒன்றின் விலை 33 ஆயிரத்து 200 ரூபாய் என்ற நிலையில், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டால் மொத்த இயந்திரமும் வாங்குவதற்கு 4 ஆயிரத்து 555 கோடி ரூபாய் தேவைப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல், 2024ஆம் ஆண்டிற்கு ஆயிரத்து 751 கோடி ரூபாய்க்கும், 2029 ஆம் ஆண்டிற்கு 2 ஆயிரத்து 17 கோடி ரூபாய்க்கும், 2034ஆம் ஆண்டில் தேர்தல் நடத்த 13 ஆயிரத்து 981 கோடி ரூபாய்க்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு மையங்களில் கூடுதல் தேர்தல் அதிகாரிகளை பணியமர்த்த வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் சட்ட ஆணையம் கூறியுள்ளது.